ஏர்போர்ட் டாய்லெட்டில் 2 கிலோ தங்கம் சிக்கியது
11/21/2014 4:12:03 PM
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி வழியாக அடிக்கடி தங்கம் கடத்தப்படுவதும், அதிகாரிகள் சோதனையில் பிடிபடுவதும் நடந்து வருகிறது.இந்நிலையில், பயணிகள் வரும் பாதையில் இமிகிரேசன் அதிகாரிகளுக்கு அறைக்கு அருகில் உள்ள ஆண்கள் கழிவறையை ஊழியர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக இன்று காலை சென்றார். அப்போது ஒரு டாய்லெட் பிளஸ்அவுட்டின் மேல் பகுதியில் பேப்பரால் சுற்றப்பட்டு ஒரு பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் தலா ஒரு கிலோ எடையுள்ள 2 தங்க கட்டிகள் இருந்தது. 2 கிலோ தங்கக்கட்டிகளையும் கைப்பற்றி, அதை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கழிவறைக்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.