சினிமா தியேட்டரில் தீ விபத்து
11/21/2014 3:43:37 PM
தாம்பரம்: பல்லாவரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் அருகே பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை பகுதியில் 5 மினி சினிமா தியேட்டர் மற்றும் 2 உணவு விடுதிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. தியேட்டரில் உள் அரங்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணி அளவில் உள் அரங்க பணிகள் நடக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக அலறிக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர்.பின்னர் தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.