இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வயல்வெளியில் சடலம் வீச்சு: நிதி நிறுவன ஊழியர் சரமாரி குத்தி கொலை

11/21/2014 2:36:14 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

சங்கராபுரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த நஞ்சப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகன கடன் வசூலிப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வேலை முடிந்து மேலப்பட்டு வழியாக மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில் நஞ்சப்புத்தூர் அருகே அவரை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர்.  உருட்டுக் கட்டையாலும் தாக்கி அங்குள்ள வயல்வெளியில் போட்டு விட்டு ஓடிவிட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில், இன்று காலை வயலுக்கு சென்றவர்கள் செல்வகுமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அருகிலேயே அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட செல்வகுமாருக்கு பாக்கியவதி என்ற மனைவியும், கிஷோர் (4) என்ற மகனும், கீர்த்தி (2) என்ற மகளும் உள்ளனர். சங்கராபுரத்தை சேர்ந்த அதிமுக வக்கீல் கடந்த மாதம் தியாகதுருகம் மெயின் ரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது நிதி நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடக்கும் கொலைகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் சில
  • திருவல்லிக்கேணியில் கள்ளநோட்டு கொடுத்து பைக் வாங்கிய சகோதரர்கள் பிடிபட்டனர்



  • கம்பெனி கதவை உடைத்து 5 மிஷின்கள் கொள்ளை



  • மயக்க குளிர்பானம் தந்து சிறுமி பலாத்காரம்: தொழிலாளி கைது



  • சேலம் அருகே பயங்கரம்: காதலியை அடித்துக் கொன்று காதலன் தூக்கு போட்டு சாவு



  • ரூ. 1 கோடி செம்மரம் காருடன் பறிமுதல்



  • வன்னியர் சங்க தலைவர் கொலை : அதிமுக கவுன்சிலர் கைது



  • மயங்கி விழுந்த குழந்தை திடீர் பலி : உணவில் விஷமா? தந்தையிடம் விசாரணை



  • திருவள்ளூர் அருகே இளம்பெண் தற்கொலை : கணவன் மீது புகார்



  • நிலத்தை அபகரிக்காமல் இருக்க ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்: அதிமுக பிரமுகர் மீது புகார்



  • 110 பவுன் நகைகள் பறிமுதல் : சென்னையை கலக்கிய திருடன் கைது



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription