உத்திரமேரூரில் தேசிய குழந்தைகள் உரிமை தின விழா
11/21/2014 2:19:23 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரியில் குழந்தை உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு மற்றும் சர்வோ அறக்கட்டளை இணைந்து தேசிய குழந்தைகள் உரிமை தினவிழாவை நேற்று கொண்டாடியது. அறக்கட்டளை இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். காவனூர்புதுச்சேரி கனரா வங்கி கிளை மேலாளர் ஸ்ரீகாந்த் காட்டுலா முன்னிலை வகித்தார். அறக்கட்டளை பொருளாளர் நாராயணமூர்த்தி வரவேற்றார். கூட்டமைப்பு இயக்குனர் தேவன்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் குழந்தைகளின் உரிமைகள், கட்டாய கல்வி, அரசின் நல திட்டங்கள், குழந்தை திருமணம் தடுத்தல், குழந்தை தொழிலாளர் அகற்றம், குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் முக்கிய பங்கு பற்றி விளக்கி பேசப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, பாட்டு, கவிதை, ஓவியம், நடன போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் காவனூர்புதுச்சேரி கனரா வங்கி துணைமேலாளர் பிரசாந்த், திருப்புலிவனம் கனரா வங்கி மேலாளர் சாகர், ஸ்டெல்லா, பொற்கொடி ஆகியோர் பேசினர். இறுதியில் அறக்கட்டளை உறுப்பினர் மனோகரன் நன்றி கூறினார்.