இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

சீன ஊடுருவல் இந்திய உறவை பாதிக்கும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

11/21/2014 2:09:13 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்


லடாக்: எல்லையில் மீண்டும் மீண்டும் சீனா ஊடுருவல் நடவடிக்கையில் ஈடுபடுவது இந்தியாவுடனான நல்லுறவை பாதிக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காஷ்மீரில் நவம்பர் 25ம் தேதி தொடங்கி 5 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பாஜ தலைவர் அமித்ஷா தலைமையில் மிஷன் 45 பிளஸ் என்ற முழக்கத்துடன் மத்திய அமைச்சர்கள் தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லே பகுதியில் நேற்று பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் பிரிவு 370 காரணமாக மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. எனவே மக்கள் பாஜவுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் 73வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த முடியும்.

 சீனா சட்டவிரோதமாக அக்சாய் சின் பகுதியில் ஊடுருவியுள்ளது. சீன ராணுவத்தினர் அடிக்கடி இது போல ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இந்தியாவுடனான நல்லுறவு பாதிக்கும். அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இரண்டு நாடுகளும் எல்லை பிரச்னைகளை தீர்த்துக் கொண்டால் நமது உறவில் புதிய உச்சங்களை எட்ட முடியும். அப்பகுதியில் முன்பு ஊடுருவல் செய்த பாகிஸ்தான் தற்போது அதனை ‘பரிசாக’ சீனாவுக்கு கொடுத்து விட்டு சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் முந்தைய தேசிய மாநாட்டு கட்சி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது. அதே போல் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இதனை பனி பாலைவனமாக்கியதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளின் காரணமாகவே சீனாவுடனான எல்லை விவகாரம் சுதந்திரம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாமல் உள்ளது என்றார்.

மேலும் சில
  • உ.பி.யில் ஆளில்லா கிராசிங்கில் பயங்கரம் : பள்ளி வேன் மீது ரயில் மோதல்: 5 குழந்தைகள் பரிதாப பலி



  • ஐதராபாத் நகர பேருந்துகளில் மகளிர் பாதுகாப்புக்கு சிறப்பு ஏற்பாடு



  • ரேபரெலி தொகுதியில் சோனியா 2 நாள் சுற்றுப்பயணம்



  • மகாராஷ்டிர அமைச்சரவையில் சிவசேனாவுக்கு 12 இடங்கள் புதிய மந்திரிகள் நாளை பதவியேற்பு



  • 68 நாடுகளில் 6500 இந்தியர்கள் சிறை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா தகவல்



  • நக்சல் தாக்குதல் சம்பவத்தின் போது காலில் குண்டுபாய்ந்த நிலையில் 9 கிமீ நடந்து சென்ற வீரர்



  • ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை : மீரா ஜாஸ்மின் திருமணம் பதிவு செய்ய மாநகராட்சி மறுப்பு



  • சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய பெண் அமைச்சர் பதவி விலக கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி : இரு அவைகளும் ஒத்திவைப்பு



  • முல்லை பெரியாறு விவகாரம் : கேரளா சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி



  • மார்கழி மாத பிறப்பு : திருப்பதியில் டிச.16 முதல் சுப்ரபாத சேவை ரத்து



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription