அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை
11/20/2014 3:12:49 PM
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி மற்றும் சேலத்தில் கடந்த 4 நாட்களில் அடுத்தடுத்து பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் உயிரிழந்ததற்கு ஊட்டச்சத்து குறைவு, மூச்சுத் திணறல் போன்ற காரணங்களை மருத்துவர்கள் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதே நேரத்தில் போர்க்கால அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அங்கன்வாடிகள் மூலமாக அனைத்து கர்ப்பிணி தாய்மார்களின் உடல்நலன் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.