கற்பூரம் ஏற்றியபோது தீ பிடித்து பெண் பலி
9/26/2014 2:44:05 PM
ஆவடி: சாமி படத்துக்கு கற்பூரம் ஏற்றிய போது புடவையில் தீ பிடித்த வயதான பெண் உயிரிழந்தார்.ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ஸ்ரீநகர் காலனி முருகன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மனைவி காந்தி (70). மகன் கிருஷ்ணதாஸ் வீட்டில் காந்தி வந்துவந்தார். கடந்த 20ம் தேதி வீட்டில் உள்ள சாமி படத்துக்கு கற்பூரம் ஏற்றி பூஜை செய்து உள்ளார். திடீரென கற்பூரம் சரிந்து காந்தி சேலையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் உடல் கருகிய அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காந்தி இறந்தார். திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.