நள்ளாட்டூர் தடுப்பணை திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு
9/26/2014 2:39:32 PM
திருத்தணி: நள்ளாட்டூர் கிராமத்தில் ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை கலெக்டர் பார்வையிட்டார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள நள்ளாட்டூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் வெள்ள தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. ஆற்றின் கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள சுடுகாடு மற்றும் விவசாய நிலத்துக்கு செல்ல மக்கள் சிரமப்பட்டனர். இதனால் சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், நேற்று மாலை கலெக்டர் வீரராகவராவ் தடுப்பணையை பார்வையிட்டார். மக்களுக்கு வழி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளை கலெக்டர் கேட்டுக்கொண்டார். அப்போது நள்ளாட்டூர் விஏஓ கவுரி இருந்தார்.இதுபோல் திருத்தணி வட்ட வழங்கல் அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார். அலுவலகத்தில் உள்ள பைல்களை பார்த்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆர்டிஓ பாண்டியன், தாசில்தார்கள் ரமேஷ், லட்சுமணன், வட்ட துணை ஆய்வாளர் இருசப்பன், வட்ட வழங்கல் அலுவலர் முனிசேகரன், துணை வட்டாட்சியர்கள் அருண்குமார், செல்வகுமார் உள்பட பலர் இருந்தனர்.