சிறுவனிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை
8/18/2014 5:23:25 PM
பொன்னேரி: மீஞ்சூரை அடுத்த கிராமத¢தை சேர்ந்த உஷா என்பவரின் மகன் வினோத் (4) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). வினோத் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 15ம் தேதியன்று தனது உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளான். அங்கு உறவினரான பாலமுருகன் (18) என்பவன் வினோத்தை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று தவறாக நடந்துள்ளான். வலி தாங்க முடியாமல் வினோத் சத்தம் போட்டு அலறியுள்ளான். சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்தவுடன் பாலமுருகன் தப்பியோடிவிட்டான். வினோத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது தொடர்பாக வினோத் பெற்றோர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பெயரில் போலீசார் தலைமறைவான பாலமுருகனை தேடி வருகின்றனர்