2011
30
May
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண்


துபாய்: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் அரேபிய பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் 2 குழந்தைகளுக்கு தாயான சுஜன்னெ அல்ஹபி. உலகின் மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் திகழ்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 29,028 அடி உயரம் கொண்டது எவரெஸ்ட். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட இந்த சிகரத்தில், இதுவரை பல நாடுகளை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஏறி சாதனை படைத்துள்ளனர். ஆனால், இதுவரை அரபு நாட்டை சேர்ந்த பெண் எவரும் இதில் ஏறியதில்லை.

பாலஸ்தீனத்தில் பிறந்து துபாயில் வசிக்கும் சுஜன்னெ (40) என்ற பெண் எவரெஸ்டில் முதல் முறையாக ஏறி அந்த குறையை போக்கியுள்ளார். இதற்காக அவர் 51 நாட்களை எடுத்துக் கொண்டார். அவருடன் சென்ற 4 பேரில் 3 பேர் சிகரத்தின் உச்சியை அடைந்தனர். இச்சாதனையை படைக்க 2 ஆண்டுகள் கடுமையாக பயிற்சி மேற்கொண்டேன். தனது கனவு நிறைவேறியதால் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்று சுஜன்னெ தெரிவித்தார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,