2011
30
Apr
மத்திய அரசுக்கு தொடர்பில்லை : சி.பி.ஐ மறுப்பு


சி.பி.ஐ செய்தித் தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா நேற்று கூறியதாவது: புரூலியாவில் ஆயுதங்கள் வீசியது தொடர்பாக டென்மார்க்கை சேர்ந்த கிம் டேவி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் ஜோதிபாசு முதல்வராக இருந்த போது மாநிலத்தில் தீவிரவாதத்தை தூண்டிவிட மத்தியில் அப்போதைய நரசிம்மராவ் அரசு முயற்சி செய்ததாக கிம் டேவி கூறியுள்ளார். எனினும், ஆயுதங்கள் வீசியதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட கிம் டேவி ஆயுதங்கள் வீசியதாக  விசாரணையில் தெரிய வந்தது. இந்திய அரசு மீதும், இந்திய புலனாய்வு ஏஜென்சி மீதும் புகார் கூறுவதன் மூலம் ஆயுதங்கள் வீசிய வழக்கை முற்றிலும் திசைதிருப்பி குழப்பம் ஏற்பட கிம் டேவி முயற்சிக்கிறார். இவ்வாறு தாரிணி மிஸ்ரா கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me