மாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்
சென்னை:தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. 30 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரும் 26ம்தேதி டெல்லியில் வெளியிடப்படுகிறது. இதில், காங்கிரசில் இடம்பெற்றுள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் தனித்தனியான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் மாணவர் காங்கிரஸ் அறிக்கையில், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்கான முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வரும் 27ம்தேதி, தமிழக மாணவர் காங்கிரஸ் தலைவர் சுனில்ராஜா தலைமையில் வெளியிடப்படுகிறது.
இந்த அறிக்கையில், மாணவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முற்றிலும் சட்ட அந்தந்தஸ்து பெற்ற தேசிய ஆணையம் அமைப்பது, கல்வி கட்டணத்தை ஒழுங்குபடுத்த மத்திய கல்வி கட்டண கண்காணிப்பு மற்றும் ஒழுங்குபடுத்தும் ஆணையம் அமைப்பது, அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் வழங்குவது, கல்லூரிகள் வரவு, செலவு கணக்குகளை தங்களது இணையதளத்தில் வெளியிடுவது, யுஜிசி பரிந்துரைப்படி தேவையான ஆசிரியர்களை பணியில் அமர்த்து வது, வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நேரடியாக கல்லூரிகளில் வளாக நேர்முகத் தேர்வு நடத்துவது, அடிப்படை சட்ட கல்வியை பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் சேர்ப்பது, மாண வர்களின் தற்கொலைகளை தடுக்க அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆலோசனை மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM