மக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்
சென்னை:சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா(எஸ்டிபிஐ) சார்பில் வடசென்னையில் நிஜாம் முகைதீன், நெல்லையில் முபாரக், ராமநாதபுரத்தில் நூர்ஜியாவூதீன் போட்டியிடுகின்றனர். இக்கட்சிக்கான தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரசார பாடல் சிடி வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. வடசென்னை வேட்பாளர் நிஜாம் முகைதீன், மாநில செயலாளர்கள் அப்துல் சத்தார், நாஞ்சில் சைய்யது அலி, அமீர் ஹம்சா, ரத்தினம் தலைமை தாங்கினர். மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, தேர்தல் பணிக்குழு தலைவர் பாரூர், மாவட்ட தலைவர்கள் முகமது ரபீக், நாஜிம், நேதாஜி ஜமால் முன்னிலை வகித்தனர். தேர்தல் அறிக்கை, பிரசார சிடியை மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வெளியிட, மாநில செயலாளர் ரத்தினம் பெற்று கொண்டார்.
தேர்தல் அறிக்கையில், Ôஅனைத்து மக்களுக்கும் சிறந்த பொதுவினியோகம், இலவச கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதி தடையின்றி கிடைக்க கொள்கை வகுக்கப்படும். விவசாயிகள், பழங்குடியினரிடம் இருந்து அரசு திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்துதல் வரைமுறைபடுத்தப்படும்.
கைவினை, பாரம்பரிய மற்றும் சிறு தொழில்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். பொருட்களை சந்தைப்படுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மேம்படுத்தப்படும். விவசாயத்திற்கு என்று குறிப்பிட்ட விலைகளுடன் தனி நிலை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். புதிய தண்ணீர் கொள்கையை உருவாக்கி மக்களின் அடிப்படை உரிமையான தண்ணீரை உறுதி செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் பயன்பாட்டிலும், பங்கீட்டிலும் தனியார் கட்டுப்பாடு முழுமையாக அகற்றப்படும்‘ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM