திருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் 3 வீட்டில் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. மர்ம ஆசாமிகளை போலீசார் தேடுகின்றனர். திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன் (38). அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று மாலை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார்.
காக்கலூர் தேவா நகரை சேர்ந்தவர் அருணா (53). இவரது மகள் சங்கீதா வேலைக்கு சென்று விட்டார். இதனால் பேரக் குழந்தைகளை அழைத்து வர அருணா நேற்று மாலையில் பள்ளிக்கு சென்றார். திரும்பி வந்தபோது வீட்டில் பூட்டை உடைத்து, 3 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது கண்டு திடுக்கிட்டார்.
காக்கலூர் ஆஞ்சநேயபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏகநாதன் (60). தனியார் கம்பெனி செக்யூரிட்டி. இவரது மனைவி மற்றும் மகன்கள் நங்கநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். ஏகநாதன் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இரவு வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த கால் கிலோ வெள்ளிக் கிண்ணம், ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு போய் இருந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்கைகள் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM