வாக்காளர்களுக்கு விருந்தா? கோயில் கிடா வெட்டுக்களை வீடியோ எடுக்கும் அதிகாரிகள்
கோவை:வாக்காளர்களுக்கு விருந்து வைத்து உபசரிப்பதாக புகார்கள் வருவதால், கோயில்களில் நடக்கும் கிடா வெட்டும் நிகழ்ச்சிகளை தேர்தல் அதிகாரிகள் வீடியோ பதிவு செய்கின்றனர்.கோவை மேட்டுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற வன பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் 30க்கும் மேற்பட்டவர்கள் கிடா வெட்டி கறி விருந்து வைப்பது வழக்கம். நேர்த்தி கடன், காது குத்து போன்றவற்றுக்காக பக்தர்கள் கிடா வெட்டுகின்றனர். தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்கள் திருஷ்டி பரிகாரமாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிடா வெட்டுவது வாடிக்கை.
தற்போது தேர்தலை முன்னிட்டு பல்வேறு சட்டமன்ற தொகுதியில் இருந்து வாக்காளர்களை அழைத்து வந்து விருந்து வைத்து உபசரிப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைதொடர்ந்து வீடியோ கண்காணிப்பு குழுவினர் தினமும் வனபத்ரகாளியம்மன் கோயில் வளாகத்தில் காத்திருந்து கிடா வெட்டு, விருந்தை வீடியோ பதிவு செய்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் முன்னிலையில் விருந்து நடக்கிறதா, உறவினர்கள் நண்பர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்களா, விழாவுக்கு பத்திரிகை இருக்கிறதா என தேர்தல் பிரிவினர் விசாரித்து வருகின்றனர். விருந்து சாப்பிட்டு மொய் எழுதினாலும், அதையும் வீடியோ பதிவு செய்து அதிகாரிகளுக்கு அனுப்பி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் அம்மன் கோயில்களில் நடைபெறும் கிடா வெட்டு நிகழ்ச்சிகள் தேர்தல் அதிகாரிகளால் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM