தேர்தல் கூட்டணி பாஜ - தெலுங்கு தேசம் பேச்சுவார்த்தை இழுபறி
ஐதராபாத்:ஆந்திராவில் தேர்தல் கூட்டணி குறித்து பாஜ மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. ஆந்திரா 2 ஆக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து சீமாந்திரா, தெலங்கானா பகுதிகளில் தனித் தனி கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜவுடன் கூட்டணி அமைக்க முயன்று வருகிறது. தெலங்கானாவில் தங்களுக்கு பாதிக்கு பாதி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பாஜ பிடிவாதம் பிடிப்பதால் தெலுங்கு தேசம், பாஜ கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக தெலுங்கு தேச கட்சியினர் தெரிவிக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலோடு சட்ட பேரவை தேர்தலும் நடைபெறுவதால் தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘தெலங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிகளில் 60 தொகுதிகளையும், 17 நாடாளுமன்ற தொகுதிகளில் 8 தொகுதிகளையும் கேட்டு பிடிவாதம் பிடிக்கிறது. மேலும் பிற்படுத்தப்பட்ட ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் நிர்பந்தம் செய்துள்ளது. பாஜ கேட்கும் தொகுதிகள் ஏறக்குறைய 50 சதவீதம் ஆகும். அதனால் பாஜ கேட்ட தொகுதிகளை ஒதுக்குவது சாத்தியமில்லை. பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது‘ என்றார்.
கூட்டணி குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தெலுங்கு தேச எம்பிக்கள் சத்தியநாராயணா, ரமேஷ் ஆகியோர் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பிரகாஷ் ஜவடேகர் இன்றும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையில், மோடியுடன் சந்திரபாபு நாயுடு பேச உள்ளதாக கூறப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM