மீனம்பாக்கத்தில் டிராவல்ஸ் பஸ்சில் 200 செல்போன், 55 குத்து விளக்கு 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்
ஆலந்தூர்:மீனம்பாக்கத்தில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் 200 செல்போன், 55 குத்து விளக்கு, 20 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல் செய்யப்பட்டது.முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். ரூ.1 லட்சம் எடுத்து சென்றாலும் பறிமுதல் செய்வதால் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வியாபாரிகள் ரூ.10 லட்சம் வரை பணம் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்கு வ¤யாபாரி என்ற சான்று வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் அதிகாரி காத்தவராயன் தலைமையில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மதுரைக்கு செல்ல இருந்த டிராவல்ஸ் பஸ்சில் சோதனையிட்டனர். அதில் சில அட்டை பெட்டிகள் இருந்தது. அந்த பெட்டிகளில் ‘டூ மதுரைÕ என¢று மட்டும் எழுதப்பட்டிருந்தது. அதை யார் அனுப்பினார், யாருக்கு அனுப்பப்பட¢டது என¢ற விவரம் இடம் பெறவில்லை.
இதையடுத்து அந்த பெட்டிகளை பறக்கும் படையினர் திறந்து சோதனையிட்டனர். அதற்குள் 200 செல்போன், 55 வெள்ளி குத்து விளக்கு மற்றும் 20 கிலோ வெள்ளி கொலுசு தோரணம் ஆகியவை இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம் ஒப்படைத்தனர். உரிமையாளர்கள், உரிய ஆவணங்களை காட்டி இந்த பொருட்களை பெற்று செல்லாம் என காத்தவராயன் தெரிவித்தார்.
can i take xyzal in the morning canitake.net can i take xyzal in the morning
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM
-Updated 3/19/2014 3:00:00 PM