ஜெ. பிரசாரத்துக்கு கூட்டம் சேர்க்க அதிமுகவினர் கடும் நெருக்கடி பட்டாசு ஆலை அதிபர்கள் குமுறல்
சிவகாசி:விருதுநகர் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நாளை திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்தில் நடைபெறுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது, ஜெயலலிதா பிரசாரத்தின் போது எதிர்பார்த்த அளவு கூட்டம் சேரவில்லை. இதற்காக கட்சியினரிடம் அதிமுக மேலிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் கூட்டம் சேர்ப்பதற்காக அதிமுகவினர் பல்வேறு உத்திகளைக் கையாளத் தொடங்கி உள்ளனர்.
சிவகாசியைச் சுற்றி உள்ள 700க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். நாளை பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளித்து தொழிலாளர்கள் அனைவரையும் ஜெ. பிரசாரம் செய்யும் இடத்துக்கு அழைத்து வர வேண்டும் என்று அதிமுக முக்கிய பிரமுகர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ஜெ. வருகையையொட்டி பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விற்பனைக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினர் நெருக்கடியும் தாங்க முடியவில்லை என ஆலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சிவகாசியில் அச்சகங்கள், சிறிய தொழில் நிறுவனங்களுக்கும் இதே நெருக்கடி தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகாசியைச் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து வாகன ஏற்பாடு செய்தும், இலவச சேலைகள் வழங்கப்படும் எனக் கூறியும் ஜெ. பிரசாரக் கூட்டத்துக்கு அதிமுகவினர் ஆள் சேர்த்து வருவதாக தெரிகிறது. இதற்காக சிவகாசியில் உள்ள வேன்கள் மற்றும் கார்கள் வியாழன், வெள்ளி 2 நாட்களுக்கும் மொத்த வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் சிலர் கூறினர். இதற்கிடையில், ஜெயலலிதா பிரசாரம் செய்யும் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு இன்று திடீர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/19/2014 3:00:00 PM