ஐதராபாத் ஏர்போர்ட்டில் 3 கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்கியது நைஜீரிய பெண் கைது
திருப்பதி:ஐதராபாத் விமான நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தி வந்த நைஜீரியா பெண் கைது செய்யப்பட்டார். நைஜீரியாவை சேர்ந்த ஜோனா சாமுவேல். இவர் அபுதாபி விமானத்தில் தென்ஆப்பிரிக்கா செல்ல ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தார். விமானத்தில் பயணம் செய்ய பயணிகளுடன் வந்த அவர் தன்னுடைய பையை சோதனை செய்யவிடாமல் தனியாக வைத்தார்.
இதனால் சந்தேகமடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். அவர் சரியாக பதில் சொல்லாததால் அவரது பையை சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட எபிடிரின் என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஜோனாசாமுவேலை கைது செய்து, அவரிடம் இருந்த 25 கிலோ எபிடிரின் போதை பொருளை பறிமுதல் செய்தனர். அவரை சென்னையில் உள்ள போதைபொருள் தடுப்பு துறையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM