Tamil Month Rasi Palan Maasi 2013
2014
19
Mar
பேச்சுவார்த்தையில் உடன்பாடு என்எல்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்


நெய்வேலி:நெய்வேலி என்எல்சியில் ஒப்பந்த தொழிலாளரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தை கண்டித்து என்எல்சி தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தம் அறிவித்தனர். இதையடுத்து நேற்று மதியம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜி ஆனந்தமோகன், தனி ஒருவரின் தவறான செயலால் ஏற்பட்ட இச்சம்பவத்துக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என என்றார்.

6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், இறந்தவரின் மனைவிக்கு வேலை வாய்ப்பும் வழங்க நிலக்கரித் துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எச்எம்எஸ் அலுவலகத்தில் தொழிற்சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. இனிவரும் காலங்களில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையை அறவே வெளியேற்றுதல், வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பணிக்கு திரும்புவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நேற்று இரவு 10 மணி முதல் அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்பினர்.

தொழிலாளி கொலை ஏன்?

என்எல்சி தொழிலாளியை சுட்டுக் கொன்ற மத்திய தொழிலக பாதுகாப்பு படைவீரர் நோமன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:
 சம்பவத்தன்று (17ம் தேதி) நான் என்எல்சி இரண்டாம் சுரங்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஜீன்ஸ் பேண்ட், நீலநிற டி சர்ட் அணிந்திருந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சுரங்க நுழைவு வாயிலுக்குள் திடீரென உள்ளே நுழைய முயன்றார். நான் என்ன வேண்டும், எதற்காக உள்ளே செல்கிறீர்கள்? உங்களுக்கு பாஸ் இருக்கிறதா? இந்தியில் கேட்டேன். அதற்கு அவர் தமிழில் ஏதோ கூறினார். மீண்டும் சுரங்கத்துக்குள் நுழைய முற்பட்டார். நான் தடுத்து நிறுத்தியபோது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அவர் நடந்து கொண்ட முறை என்னை கிண்டலும், கேலியும் செய்வதாக இருந்தது. துப்பாக்கியால் சுட்டு விடுவாயா? என சைகையால் கேட்பதுபோல் இருந்தது. இந்த வாக்குவாதத்தில் என்னிடமிருந்த துப்பாக்கியை அவர் பிடுங்க வந்தார்.

 அப்போது திடீரென நான் துப்பாக்கியை எடுத்து ஆத்திரத்தில் அவரை சுட்டுவிட்டேன். நான் செய்வதறியாது திகைத்து நின்றபோது அருகே நின்ற மற்ற வீரர்கள் என்னைப்பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கிடையில், என்எல்சியில் நடந்த கலவரம் தொடர்பாக 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement