கூட்டணி கட்சிகளை மதிப்பவர் கருணாநிதி அன்பழகன் பேச்சு
தாம்பரம்:ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் குரோம்பேட்டையில் இன்று திறக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் தா. மோ.அன்பரசன் தலைமை வகித்தார். பல்லாவரம் நகர செயலாளர் இ.கருணாநிதி வரவேற்றார்.திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியது:
கடந்த இரண்டரை ஆண்டு காலமாக பல்வேறு தொல்லைகளை அனுபவித்து வருகிறோம். அந்த சூழலை மாற்றுவதற்காக வந்ததுதான் இந்த நாடாளுமன்ற தேர்தல்.நாம் அதிக இடங்களில் வெற்றி பெறும்போது மத்தியில் மதசார்பற்ற அரசு அமைய வழிவகை செய்யும். தமிழகத்தில் 5 முறை கருணாநிதி முதல்வராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். தமிழகமும், தமிழனும் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் கருணாநிதிதான். ஆனால் ஜெயலலிதா, தமிழனை மதிக்காதவர்.
கூட்டணியை மதிக்காதவர்.
40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்து கம்யூனிஸ்ட்டுகளை கூட்டணியை விட்டு வெளியேற்றி விட்டார். ஆனால் கருணாநிதி அப்படி அல்ல. தனக்கு சமமாக கூட்டணி கட்சிகளை மதிப்பவர்.இவ்வாறு க.அன்பழகன் பேசினார்.ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி, நாடாளுமன்ற தொகுதி பொறுப் பாளர் மீ.அ.வைதியலிங்கம், தாம்பரம் நகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா, பம்மல் நகர செயலாளர் வே.கருணாநிதி, பேரூர் செயலாளர்கள் திருநீர்மலை ஜெயக்குமார், பீர்க்கன்காரணை ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM