திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வயலில் வாலிபரை கொலை செய்த புகாரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்த சத்தரை கிராமம் மேட்டு காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் (30). விவசாயி. திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 16ம் தேதி நண்பர் சிவாவுடன் பைக்கில் வேகமாக சென்றார். அப்போது அந்த பகுதியில் பிறந்த நாள் விழா ஒன்று நடந்துகொண்டிருந்தது. இதில் பங்கேற்ற அதே பகுதியை சேர்ந்த பெருமாள், பைக்கில் வேகமாக வந்த சீனிவாசனை கண்டித்தார். இதனால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு வயலில் சீனிவாசன் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தார். அப்போது 12 பேர் கொண்ட கும்பல் கிரிக்கெட் மட்டை மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கினர். இதில் சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று மாலை திருத்தணி கோர்ட்டில் 7 பேர் சரண் அடைந்தனர். சந்திரகாந்த் (30), ராஜேஷ் (24), தசரதன் (50) ஆகியோரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுபாஷ், ராஜேந்திரன் ஆகியோரை தேடுகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM