பஸ் ஸ்டாப் அகற்றியதற்கு எதிர்ப்பு கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் மறியல்
திருவொற்றியூர்:பஸ் ஸ்டாப்பில் தேர்தல் அலுவலகம் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எண்ணூர்- கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் இருந்த பஸ் ஸ்டாப் சில மாதத்துக்கு முன் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. இதன்பிறகு அந்த இடத்தில் பஸ் ஸ்டாப் கட்டவில்லை. இதனால் வெயில், மழையில் நின்று பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். மீண்டும் பஸ் ஸ்டாப் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், பஸ் ஸ்டாப் இருந்த இடத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் கட்டியுள்ளனர். இதுபற்றி முன்னாள் கவுன்சிலர் ஜெய்சங்கர் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்றிரவு, ஜெய்சங்கர் தலைமையில் 100 பேர் வந்தனர். தேர்தல் அலுவலகத்தை அகற்றவேண்டும் என்று கோஷம் போட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து வந்து மறியல் செய்தவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM