திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் மாதவரம் சுதர்சனம் வெளியிட்ட அறிக்கை:திருவள்ளூரில் நாடாளுமன்ற தொகுதி தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. இதன்படி நாளை காலை 10 மணி அளவில் பூந்தமல்லி ராணி திருமண மண்டபத்தில் பூந்தமல்லி தொகுதி செயல் வீரர்கள் கூட்டமும் மாலை 3 மணிக்கு ஜிஎன்டி சாலையில் உள்ள நெல், அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் மாதவரம் செயல்வீரர்கள் கூட்டமும் நடைபெறும்.
21ம் தேதி காலை 10 மணிக்கு ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள பாண்டியன் அரிசி ஆலையில் ஆவடி தொகுதி செயல்வீரர்கள் கூட்டமும் மாலை 3 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள மல்லீஸ்வரி திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி தொகுதி செயல்வீரர்கள் கூட்டமும் நடக்கிறது. 22ம் தேதி காலை 10 மணிக்கு பேரம்பாக்கம் மீனாட்சி ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் திருவள்ளூர் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. எனவே, இந்த கூட்டத்துக்கு அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கிளை, பேரூர் செயலாளர்கள், கூட்டணி கட்சியினருக்கு தகவல் கொடுத்து கூட்டத்தில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM