செங்கல்பட்டில் பறக்கும்படை சோதனை காரில் கொண்டு சென்ற 11 லட்சம் பணம் சிக்கியது
செங்கல்பட்டு:நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் கொடுக்க வாகனங்களில் பணம் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கை எடுத்து உள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 4 பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படையினர் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 5 மணி வரை செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்வாவடி பகுதியில் சென்னை& திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாசில்தார் புஷ்பலதா தலைமையில் வாகன சோதனை நடத்தினர். இன்று அதிகாலை சென்னையில் இருந்து மதுராந்தகம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சம் பணம் சிக்கியது. அதை கொண்டு வந்த மதுராந்தகம் அடுத்த பள்ளியகரம் மங்கலத்தை சேர்ந்த சிவா (39) என்பவரிடம் விசாரித்தனர். அவரிடம் ஆவணம் எதுவும் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்தை செங்கல்பட்டு அரசு கருவூலகத்தில் கட்டினர்.
நேற்று மாலை செங்கல்பட்டு- திருப்போரூர் சாலையில் வாகன சோதனை நடத்தினர். காரில் ஒரு வக்கீலிடம் இருந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்தனர். தேர்தல் நேரத்தில் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் ஆம்னி பஸ்களை தொடர்ந்து சோதனை செய்ய மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் உத்தரவிட்டு உள்ளதால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சென்னை& புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/15/2014 12:38:42 PM
-Updated 3/15/2014 12:37:29 PM
-Updated 3/14/2014 3:01:37 PM
-Updated 3/14/2014 3:01:29 PM
-Updated 3/14/2014 3:01:22 PM
-Updated 3/14/2014 3:01:11 PM
-Updated 3/14/2014 3:00:15 PM
-Updated 3/14/2014 3:00:08 PM
-Updated 3/14/2014 2:59:51 PM
-Updated 3/14/2014 2:59:44 PM
-Updated 3/13/2014 2:59:17 PM
-Updated 3/13/2014 2:58:45 PM
-Updated 3/13/2014 2:40:06 PM
-Updated 3/13/2014 2:39:50 PM
-Updated 3/13/2014 2:39:42 PM