கூடுவாஞ்சேரி அருகே வியாபாரி கொலை கள்ளக்காதலன் போலீஸ்காரரின் மகனா?
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரங்கன் (42). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி (33). கடந்த 9ம் தேதி ரங்கனும், லட்சுமியும் மாயமானார்கள். வீடு முழுவதும் ரத்த கறையும், மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த நகை, பணம், பத்திரங்கள், பைக் மற்றும் கடை சாவி உள்ளிட்ட பொருட்களை காணவில்லை.
இது குறித்து ரங்கனின் தம்பி ராஜேந்திரன் கூடுவாஞ்சேரி போலீசிலும், மாவட்ட எஸ்.பி.யிடமும் புகார் செய்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரித்து வந்தனர். இந்நிலையில் கோவளம் அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்டு போர்வையால் மூடப்பட்ட சடலம் கிடந்தது. விசாரித்ததில் ரங்கனின் சடலம் என்பது தெரிந்தது. தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயத்துடன் அழுகிய நிலையில் சடலம் கிடந்தது. தனிப்படை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலன் சதீஷ், லட்சுமி ஆகியோர் அடியாட்கள் மூலம் ரங்கனை அடித்து கொலை செய்து காரில் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். பிறகு முட்டுக்காடு கால்வாயில் வீசிவிட்டு தப்பியுள்ளனர். இது தொடர்பாக கள்ளக்காதலன் சதீஷ், லட்சுமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதில் கள்ளக்காதலன் சதீஷ், போலீஸ்காரர் ஒருவரின் மகன் என்பதால் விசாரணையை தாமதப்படுவதாக ரங்கனின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/15/2014 12:38:42 PM
-Updated 3/15/2014 12:37:29 PM
-Updated 3/14/2014 3:01:37 PM
-Updated 3/14/2014 3:01:29 PM
-Updated 3/14/2014 3:01:22 PM
-Updated 3/14/2014 3:01:11 PM
-Updated 3/14/2014 3:00:15 PM
-Updated 3/14/2014 3:00:08 PM
-Updated 3/14/2014 2:59:51 PM
-Updated 3/14/2014 2:59:44 PM
-Updated 3/13/2014 2:59:17 PM
-Updated 3/13/2014 2:58:45 PM
-Updated 3/13/2014 2:40:06 PM
-Updated 3/13/2014 2:39:58 PM
-Updated 3/13/2014 2:39:42 PM