ஆவடி:ஆவடியை அடுத்த அயப்பாக்கம் ஐயப்பா நகர் சக்தி தெருவில் வசிப்பவர் மோகன்தாஸ். இவரது மனைவி ஹேமா (55). இவர் நேற்றிரவு யோகா பள்ளிக்கு சென்றார். ஐயப்பன் தெருவில் வந்தபோது அவரை பைக்கில வந்த 2 பேர் மறித்து, அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்து தப்பிவிட்டனர்.
கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி பிருந்தாவணி (46). பள்ளி ஆசிரியை. நேற்று அங்குள்ள கடையில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்கு நடந்துசென்றார். அப்போது பைக்கில் வந்த நபர் அவரை மறித்து, பிருந்தாவணி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து தப்பினர்.
ஆவடியை அடுத்த வெள்ளானூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பவர் சந்திரபிரியா (20). இவர் நேற்று ஆவடியிலிருந்து பஸ்சில் சென்றார். வெள்ளானூர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, விடுதிக்கு அலமாதி சாலை வழியாக நடந்துசென்றார். அந்த சமயத்தில் பைக்கில் வந்த வாலிபர், சந்திரபிரியாவிடம் இருந்து 3 பவுன் செயினை பறித்து தப்பினார்.இதுபற்றி புகாரின்படி திருமுல்லைவாயல், கொரட்டூர், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து விசாராணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/3/2025 3:06:04 PM
-Updated 3/3/2025 3:05:33 PM
-Updated 3/3/2025 3:05:17 PM
-Updated 3/3/2025 3:05:02 PM
-Updated 3/3/2025 3:04:54 PM
-Updated 3/3/2025 3:04:44 PM
-Updated 3/3/2025 1:55:36 PM
-Updated 3/1/2025 12:19:17 PM
-Updated 3/1/2025 12:13:18 PM
-Updated 3/1/2025 12:12:33 PM
-Updated 3/1/2025 12:12:08 PM
-Updated 3/1/2025 12:11:45 PM
-Updated 3/1/2025 12:11:36 PM
-Updated 3/1/2025 12:08:59 PM
-Updated 3/1/2025 12:08:51 PM