புழல்:ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை மாதவரம் போக்குவரத்து உதவி ஆணையர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் நேற்றிரவு செங்குன்றம், வடகரை சந்திப்பில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னையை நோக்கி வந்த காரை மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.
இதையடுத்து, போலீசார் பைக்கில் விரட்டிச்சென்று அந்த காரை சுற்றிவளைத்து பிடித்தனர். காரில் சோதனை போட்டபோது, ஹெராயின் போதை பொருளுடன் சேர்க்கப்படும் பவுடர் இருந்தது. டிரைவர் ஆந்திராவை சேர்ந்த நரசிம்மராவை (50) கைது செய்து, செங்குன்றம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். செங்குன்றம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/3/2025 3:06:04 PM
-Updated 3/3/2025 3:05:33 PM
-Updated 3/3/2025 3:05:17 PM
-Updated 3/3/2025 3:05:02 PM
-Updated 3/3/2025 3:04:54 PM
-Updated 3/3/2025 3:04:44 PM
-Updated 3/3/2025 1:55:36 PM
-Updated 3/1/2025 12:19:17 PM
-Updated 3/1/2025 12:13:18 PM
-Updated 3/1/2025 12:12:58 PM
-Updated 3/1/2025 12:12:08 PM
-Updated 3/1/2025 12:11:45 PM
-Updated 3/1/2025 12:11:36 PM
-Updated 3/1/2025 12:08:59 PM
-Updated 3/1/2025 12:08:51 PM