ஊத்துக்கோட்டை பள்ளியில் பிளஸ்&2 தேர்வு எழுதும் மாணவருக்கு பரிசு அறிவிப்பு
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்&2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண் வாங்குவோருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு வரும் 3ம் தேதி பிளஸ்&2 தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் ராசமாணிக்கம் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ஷேக் தாவூத், கிராம கல்வி குழு முன்னாள் தலைவர் திருத்தணி ரெட்டியார், ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனி, கூட்டுறவு சங்க தலைவர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் சீனிவாசன், வெங்கட கிருஷ்ணா வரவேற்றனர்.
இதில் ஆண்கள் பள்ளியில் 300 பேர், பெண்கள் பள்ளியில் 377 பேர் என மொத்தம் 677 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இந்த முறை தேர்வில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதால் எப்படி தேர்வு எழுத வேண்டும் என்று தலைமையாசிரியர்கள் விளக்கி பேசினர். ராசமாணிக்கம் கூறுகையில், பிளஸ்&2 தேர்வில் பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண் வாங்குபவர்களுக்கு எனது சொந்த செலவில் ஒரு கிராம் தங்க நாணயம், பள்ளியில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ரூ.5 ஆயிரம், இரண்டாம் இடம் வருவோருக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாம் இடம் வருவோருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் வந்தால் தமிழக அரசு மூலம் கலெக்டர் ரூ.50 ஆயிரம் வழங்குவார் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/3/2025 3:06:04 PM
-Updated 3/3/2025 3:05:33 PM
-Updated 3/3/2025 3:05:17 PM
-Updated 3/3/2025 3:05:02 PM
-Updated 3/3/2025 3:04:54 PM
-Updated 3/3/2025 3:04:44 PM
-Updated 3/3/2025 1:55:36 PM
-Updated 3/1/2025 12:19:17 PM
-Updated 3/1/2025 12:13:18 PM
-Updated 3/1/2025 12:12:58 PM
-Updated 3/1/2025 12:12:33 PM
-Updated 3/1/2025 12:11:45 PM
-Updated 3/1/2025 12:11:36 PM
-Updated 3/1/2025 12:08:59 PM
-Updated 3/1/2025 12:08:51 PM