நடுரோட்டில் மனைவி கழுத்து அறுத்து கொலை கணவன் வெறிச்செயல்
திண்டுக்கல்:திண்டுக்கல் டெலிபோன் காலனியை சேர்ந்தவர் அருள்ஜோதி, லாரி டிரைவர். இவரது மனைவி மரிய தெரசு ராஜகுமாரி (28), தனியார் டிபார்ட்மென்ட் ஸ்டோர் குடோனில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஹரிபிரசாத் என்ற மகன் உள்ளான். அருள்ஜோதிக்கும் ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த ராஜகுமாரி, கணவரிடம் கள்ளத் தொடர்பைத் துண்டிக்குமாறு கூறினார்.
அவர் மறுத்ததால் கடந்த 7 மாதங்களுக்கு முன் மனைவியைப் பிரிந்து சென்றார். இதற்கிடையில், தான் வேலை பார்க்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோரின் குடோனுக்கு ராஜகுமாரி இன்று காலை வேலைக்குப் புறப்பட்டார். குடோன் அருகே சென்ற போது அங்கு வந்த அருள்ஜோதி மனைவியை வழிமறித்து தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அருள்ஜோதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்தார். ரத்தம் பீறிட்ட நிலையில் ராஜகுமாரி மயங்கி விழுந்தார். ஆத்திரம் அடங்காத அருள்ஜோதி அவரை கத்தியால் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ராஜகுமாரி அந்த இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மரிய தெரசு ராஜகுமாரி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய அருள்ஜோதியை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/25/2014 3:19:14 PM
-Updated 2/25/2014 3:19:01 PM
-Updated 2/25/2014 3:18:53 PM
-Updated 2/25/2014 3:18:29 PM
-Updated 2/25/2014 3:18:22 PM
-Updated 2/25/2014 3:18:14 PM
-Updated 2/25/2014 3:18:06 PM
-Updated 2/25/2014 3:17:57 PM
-Updated 2/25/2014 3:17:43 PM
-Updated 2/25/2014 3:17:36 PM
-Updated 2/25/2014 3:05:54 PM
-Updated 2/25/2014 3:05:44 PM
-Updated 2/25/2014 2:17:21 PM
-Updated 2/24/2014 3:21:24 PM
-Updated 2/24/2014 3:21:04 PM