உத்தரபிரதேசத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்கிறது நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை
அலகாபாத்:உத்தரபிரதேசத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற ஊழல் குறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது.மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு தூர் வாருதல், கண்மாயை பராமரித்தல், சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள பல்ராம்பூர், கோண்டா, மகோபா, சன்பத்ரா, சந்த்கபிர் நகர், மிர்சாபூர், குஷிநகர் ஆகிய 7 மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழும்பின. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என சச்சிதானந்த குப்தா என்பவர் அலகாபாத்தில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கடந்த 2007 முதல் 2010 காலகட்டத்தில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் தேவி பிரசாத் சிங், அசோக்பால் சிங் ஆகியோர் தேசிய கிராமப்புற வேலை திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டனர். இது தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை விரைவில் சிபிஐ தாக்கல் செய்ய உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் கிளம்பியுள்ள இந்த முறைகேடு புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/25/2014 3:19:14 PM
-Updated 2/25/2014 3:19:01 PM
-Updated 2/25/2014 3:18:53 PM
-Updated 2/25/2014 3:18:29 PM
-Updated 2/25/2014 3:18:22 PM
-Updated 2/25/2014 3:18:14 PM
-Updated 2/25/2014 3:18:06 PM
-Updated 2/25/2014 3:17:57 PM
-Updated 2/25/2014 3:17:43 PM
-Updated 2/25/2014 3:17:36 PM
-Updated 2/25/2014 3:05:54 PM
-Updated 2/25/2014 3:05:44 PM
-Updated 2/25/2014 2:17:21 PM
-Updated 2/24/2014 3:21:24 PM
-Updated 2/24/2014 3:21:04 PM