Tamil Month Rasi Palan Maasi 2013
2014
21
Feb
கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் கத்தாரில் 4 ஆண்டுகளில் 1,000 இந்தியர்கள் சாவு



புதுடெல்லி:கத்தார் நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரம் இந்தியர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கத்தார் நாட்டில் பல்வேறு நாட்டினரும் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் இந்தியர்கள்தான் அதிகமாக உள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கத்தாரில் 5 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. இது கத்தார் மக்கள் தொகையில் 26 சதவீதமாகும். பெரும்பாலான இந்தியர்கள் கட்டுமானம் உள்பட பல்வேறு சாதாரண வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது. இவர்களில் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரம் இந்தியர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கத்தாரில் வரும் 2022ம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடக்கிறது. இதற்காக ஸ்டேடியம் உள்பட பல்வேறு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதில் இந்தியர்கள் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கடுமையாக வேலை செய்து வருகின்றனர். கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளில் விபத்துகளில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கத்தாரில் உள்ள இந்திய தூதரகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு தூதரகம் அளித்த பதிலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கத்தாரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், பெரும்பாலான இந்தியர்கள் உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் இறந்துள்ளனர். அதனால் பயப்படும்படியாக எதுவும் இல்லை. இந்த புள்ளி விவரத்தை தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க கூடாது. இந்திய தொழிலாளர்களுக்கு கத்தார் அரசு தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறது என்று தெரிவித்துள்ளனர். எனினும், மனித உரிமை அமைப்புகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளன. விலங்குகளை போல் மனிதர்களை வேலை வாங்குகின்றனர். தொழிலாளர்களின் உரிமைகள், வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இந்தியர்கள் தவிர கடந்த 2 ஆண்டுகளில் 382 நேபாளிகளும் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement