ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 7 பேர் படுகொலை
லாகூர்:பாகிஸ்தானின் ஜவ்ஹர் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் நேற்று இறந்து கிடந்தது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் ஜவஹர் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளாக இரண்டு சகோதரர்கள், அவர்களது மனைவி மற்றும் 3 குழந்தைகள் வசித்தனர். குடும்பத்தில் கடைசி சகோதரர் ஒருவர் திருமணம் ஆகாதவர். அவரும் இவர்களுடன் வசித்தார். இந்நிலையில் 8 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், வீட்டில் இருந்து ஷாஹித் இக்பால் (43), அவருடைய மனைவி பர்சானா (41), அவர்களது குழந்தைகள் அஃபாக் (13), அம்னா (8) மற்றும் மற்றொரு சகோதரர் சாஹித் இக்பால் (50), அவரது மனைவி நசீம் (45), அவர்களது மகள் அரீபா (6) ஆகியோரின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இறந்தவர்களின் தலை மற்றும் முகத்தில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. போலீசார் விசாரணையில் திருமணமாகாமல் இருந்த சகோதரர் நசீர் அகமத் (55) என்பவர்தான் 7 பேரையும் படுகொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது. நசீர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவரது உடலில் சிறு கீரல் கூட இல்லை. எனவே இவர் மற்றவர்களை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது சொந்த ஊரான குஜ்ரன்வாலாவுக்கு அனுப்பப்பட்டது. சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/25/2014 3:19:14 PM
-Updated 2/25/2014 3:19:01 PM
-Updated 2/25/2014 3:18:53 PM
-Updated 2/25/2014 3:18:29 PM
-Updated 2/25/2014 3:18:22 PM
-Updated 2/25/2014 3:18:14 PM
-Updated 2/25/2014 3:18:06 PM
-Updated 2/25/2014 3:17:57 PM
-Updated 2/25/2014 3:17:43 PM
-Updated 2/25/2014 3:17:36 PM
-Updated 2/25/2014 3:05:54 PM
-Updated 2/25/2014 3:05:44 PM
-Updated 2/25/2014 2:17:21 PM
-Updated 2/24/2014 3:21:24 PM
-Updated 2/24/2014 3:21:04 PM