கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 62 ஊராட்சிகளில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் அரசு திட்டப்பணிகளை விரைந்துமுடிக்கவேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 62 ஊராட்சிகளில் நடந்துவரும் 100 நாள் வேலை திட்டப்பணிகள், இதுவரை கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு அரைகுறையாக நிற்கும் வீடுகளை முழுமையாக கட்டிக்கொடுப்பது பற்றி ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டன. இந்த கூட்டத்துக்கு உதவி திட்ட மண்டல அலுவலர் லதா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, முரளி முன்னிலை வகித்தனர். ஊராட்சிமன்ற தலைவர்கள் பிரதாப்ரெட்டி, சேகர், சேகர் உள்ளிட்ட பல கலந்துகொண்டனர்.
‘பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு அணைத்து பணிகளையும் நிறைவேற்ற ஊராட்சிமன்ற தலைவர்கள் ஒத்துழைக்கவேண்டும்Õ என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 3/24/2014 2:49:08 PM
-Updated 3/24/2014 2:49:00 PM
-Updated 3/24/2014 2:48:51 PM
-Updated 3/22/2014 12:34:34 PM
-Updated 3/22/2014 12:34:26 PM
-Updated 3/22/2014 12:34:17 PM
-Updated 3/22/2014 12:34:09 PM
-Updated 3/22/2014 12:34:00 PM
-Updated 3/21/2014 3:14:09 PM
-Updated 3/21/2014 2:36:49 PM
-Updated 3/21/2014 2:27:59 PM
-Updated 3/20/2014 3:13:14 PM
-Updated 3/20/2014 3:13:01 PM
-Updated 3/20/2014 2:40:27 PM
-Updated 3/20/2014 2:40:17 PM