சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாட்டில் மின்வெட்டு மீண்டும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. நகர்ப்புறங்களில் 4 மணி நேரமும், கிராமப்புறங்களில் 6 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில், மின்வெட்டால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஒவ்வொரு முறை சட்டப்பேரவை கூடும்போதும் மின்வெட்டு குறைந்துவிடும் என்று ஜெயலலிதா அறிவிப்பதும், அதற்கு அடுத்த நாளிலிருந்து மின்வெட்டு அதிகரிப்பதும் வழக்கமாகி விட்டது. உண்மையில் தமிழ்நாட்டின் மின்வெட்டை போக்க, அதிமுக அரசு எந்த நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக எந்த ஒரு மின்திட்டத்திற்கான பணிகளுமே தொடங்கப்படவில்லை. எனவே, எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுத்த வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/8/2025 12:39:55 PM
-Updated 2/8/2025 12:39:46 PM
-Updated 2/8/2025 12:39:34 PM
-Updated 2/8/2025 12:39:26 PM
-Updated 2/8/2025 12:39:17 PM
-Updated 2/8/2025 12:39:09 PM
-Updated 2/8/2025 12:38:59 PM
-Updated 2/8/2025 12:17:30 PM
-Updated 2/7/2025 2:05:44 PM
-Updated 2/7/2025 2:05:26 PM
-Updated 2/7/2025 2:04:52 PM
-Updated 2/7/2025 2:04:43 PM
-Updated 2/7/2025 2:04:15 PM
-Updated 2/7/2025 1:54:41 PM
-Updated 2/7/2025 1:52:07 PM