Tamil Month Rasi Palan Maasi 2013
2014
07
Feb
புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்


திருப்போரூர்:திருப்போரூர் அருகே புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண் டார். அவரது சாவுக்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆமூர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை. இவரது மகள் பிரியா (22). இவருக்கும் திருப்போரூரை அடுத்த மானாம்பதி அகரம்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பால்டேனியல் என்பவருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. கணவர் வீட்டில் இருந்த பிரியா நேற்று காலை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரியா இறந்தார். இதுசம்பந்தமாக மானாம்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பிரியா உடலை வாங்க பெற்றோர் மறுத்து விட்டனர். பிரியா சாவுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரியாவின் தாய் அஞ்சலை மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை திருப்போரூர் & திருக்கழுக்குன்றம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி மோகன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரியா தற்கொலைக்கு காரணமான பால் டேனியல், அவரது அப்பா பால்ராஜ், தாய் ஜோதி ஆகியோரை தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran