மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்க திமுகவினருக்கு போலீசார் தடை
சென்னை: அதிமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி சார்பில் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி தொடங்கிய பிரசாரம் நேற்று முடிந்தது.தென்சென்னை மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா தலைமையில் வட்ட செயலாளர்கள் பா.குமரன், சு.சம்பந்தம் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை துண்டு பிரசுரம் வழங்கினர். அவர்களை போலீசார் நுழைவு வாயில் முன்பாக தடுத்து நிறுத்தினர். திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் திமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், கோயம்பேடு பஸ் நிலையம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை உருவானது. போலீஸ் தடையை மீறி திமுகவினர் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
இது குறித்து இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரபாகர்ராஜா கூறுகையில், ‘தமிழக அரசின் அவலங்களை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொது மக்கள் வாங்கி படிக்கின்றனர். ஆனால், இதனை போலீசார் தடுத்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கதக்கது. அரசின் அவலங்களை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்குவதை தடுத்தாலும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியில் திமுக வெற்றி பெறும். இதனை யாராலும் தடுக்க முடியாது‘ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/8/2025 12:39:55 PM
-Updated 2/8/2025 12:39:46 PM
-Updated 2/8/2025 12:39:34 PM
-Updated 2/8/2025 12:39:26 PM
-Updated 2/8/2025 12:39:17 PM
-Updated 2/8/2025 12:39:09 PM
-Updated 2/8/2025 12:38:59 PM
-Updated 2/8/2025 12:17:30 PM
-Updated 2/7/2025 2:05:44 PM
-Updated 2/7/2025 2:05:35 PM
-Updated 2/7/2025 2:05:26 PM
-Updated 2/7/2025 2:04:43 PM
-Updated 2/7/2025 2:04:15 PM
-Updated 2/7/2025 1:54:41 PM
-Updated 2/7/2025 1:52:07 PM