பழவேற்காட்டில் 30 லட்சம் ரேஷன் பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது
பொன்னேரி:பழவேற்காட்டில் ரூ.30 லட்சம் ரேஷன் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந் ததை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கலெக்டர் வீரராகவராவுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் வில்சன் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று அதிகாலையில் பழவேற்காடு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் 90 மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசியும், இஸ்ரவேல் குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் 150 மூட்டைகளில் 10 டன் ரேஷன் அரிசியும் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம். இதையடுத்து அவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஸ்ரீலேகா, கலா, பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், ஆறு வழியாக படகில் ஆந்திராவுக்கு கடத்துவது தெரிந்தது. பின்னர் 3 பேரும் திருப்பாலைவனம் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/8/2025 12:39:55 PM
-Updated 2/8/2025 12:39:46 PM
-Updated 2/8/2025 12:39:34 PM
-Updated 2/8/2025 12:39:26 PM
-Updated 2/8/2025 12:39:17 PM
-Updated 2/8/2025 12:39:09 PM
-Updated 2/8/2025 12:38:59 PM
-Updated 2/8/2025 12:17:30 PM
-Updated 2/7/2025 2:05:44 PM
-Updated 2/7/2025 2:05:35 PM
-Updated 2/7/2025 2:05:26 PM
-Updated 2/7/2025 2:04:52 PM
-Updated 2/7/2025 2:04:43 PM
-Updated 2/7/2025 1:54:41 PM
-Updated 2/7/2025 1:52:07 PM