கோமாரி நோய் எதிரொலி மாடுகளுக்கு இன்சூரன்ஸ் 15 மாவட்டங்களில் அதிகரிப்பு
கோவை:தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கோமாரி நோய் பீதியால் 1.86 லட்சம் கறவை மாடுகள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் கோமாரி நோய்க்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் இறந்தன. 40 ஆயிரம் மாடுகள் நோய் பாதிப்பில் இருந்தன. இந்த மாடுகள் தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணம் பெற்றன. மாநில அளவில் கோமாரி நோய் தடுக்க தடுப்பூசி போடப்பட்டது. கோமாரி நோய் பரவியதால் பால் உற்பத்தியும் சரிந்தது. தற்போது போடப்பட்ட தடுப்பூசி 6 மாதம் மட்டுமே நோய் பரவாமல் தடுக்கும் தன்மை பெற்றது. மீண்டும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி போடாவிட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
கால்நடைகளுக்கு இறப்பு ஏற்பட்டால் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக இன்சூரன்ஸ் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. கறவை மாடு, எருமை வைத்திருப்போர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேரலாம். பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 50 சதவீத இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்தவேண்டும். கால்நடை பராமரிப்பு துறை 50 சதவீத இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கறவை மாடுகள், எருமைகள் இன்சூரன்ஸ் செய்யப்படுவது அதிகரித்தது. இந்த 15 மாவட்டங்களில் 1.86 லட்சம் கறவை மாடுகள், கறவை எருமைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. நடப்பாண்டில் சுமார் 3 லட்சம் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் செய்த மாடுகள் நோய் தாக்கியோ, இயற்கையாகவோ இறந் தால் டாக்டர் குழு பிரேத பரிசோதனை செய்து அறிக்கை தரும். அதன்அடிப்படையில் இழப்பீடு பெறலாம் என கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 12:24:38 PM
-Updated 1/4/2025 12:06:22 PM
-Updated 1/4/2025 12:04:37 PM
-Updated 1/4/2025 12:04:27 PM
-Updated 1/4/2025 12:04:19 PM
-Updated 1/4/2025 12:04:11 PM
-Updated 1/4/2025 12:03:58 PM
-Updated 1/4/2025 12:03:49 PM
-Updated 1/4/2025 12:03:41 PM
-Updated 1/3/2025 2:18:56 PM
-Updated 1/3/2025 2:18:45 PM
-Updated 1/3/2025 2:18:36 PM
-Updated 1/3/2025 2:18:28 PM
-Updated 1/3/2025 2:18:19 PM
-Updated 1/3/2025 2:18:09 PM