ஜோலார்பேட்டை அருகே மருமகனுடன் கள்ளத்தொடர்பு பெண் கழுத்தறுத்து படுகொலை கணவனிடம் போலீஸ் விசாரணை
ஜோலார்பேட்டை:வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்னாகவுண்டனூர் குந்தி மாரியம்மன் கோயில் வட்டத்தை சேர்ந்தவர் போகி(50). விவசாயி. இவரது மனைவி லட்சுமி(40). இவர் அந்தப்பகுதியில் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
மூத்த மகளுக்கும், ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி வெங்கடேசனுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்கள் ஆலங்காயம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.இந்நிலையில், மாமியார் லட்சுமிக்கும், மருமகன் வெங்கடேசனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் போகிக்கு தெரிய வந்ததால் அவர் மனைவியை கண்டித்ததோடு மருமகன் வெங்கடேசனிடம் பேசுவதை தவிர்த்து வந்தாராம். ஆனால் லட்சுமி, வெங்கடேசன் ஆகியோர் தங்கள் கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலை லட்சுமி, தனது 2வது மகளிடம் வேலைக்காக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. புத்தாண்டு என்பதால் உறவினர் வீட்டுக்கு லட்சுமி சென்றிருக்கலாம் என கருதி அவரது குடும்பத்தினர் தேடாமல் இருந்துள்ளனர்.இன்று காலை பொன்னேரி அருகே உள்ள பெரிய ஏரி என்ற இடத்தில் சென்ற சிலர், அங்குள்ள பருத்தி தோட்டத்தில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள், விஏஓ இலியாசுக்கு தகவல் கொடுத்தனர். அவர் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடம் வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சடலமாக கிடந்தவர் போகியின் மனைவி லட்சுமி என தெரிந்தது. மேலும் சடலம் இருந்த சிறிது தூரத்தில் ஒரு கத்தியை மீட்டனர். அதில் ரத்தக்கறை இருந்துள்ளது.
கள்ளத்தொடர்பு காரணமாக லட்சுமியை அவரது கணவர் போகி கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதன்பேரில் போகியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் சென்னைக்கு வேலைக்காக சென்றுள்ள வெங்கடேசனிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 12:24:38 PM
-Updated 1/4/2025 12:06:22 PM
-Updated 1/4/2025 12:04:37 PM
-Updated 1/4/2025 12:04:27 PM
-Updated 1/4/2025 12:04:19 PM
-Updated 1/4/2025 12:04:11 PM
-Updated 1/4/2025 12:03:58 PM
-Updated 1/4/2025 12:03:49 PM
-Updated 1/4/2025 12:03:41 PM
-Updated 1/3/2025 2:18:56 PM
-Updated 1/3/2025 2:18:45 PM
-Updated 1/3/2025 2:18:36 PM
-Updated 1/3/2025 2:18:28 PM
-Updated 1/3/2025 2:18:19 PM
-Updated 1/3/2025 2:18:09 PM