திருச்செந்தூர் சென்று திரும்பிய போது ரோட்டில் கார் கவிழ்ந்து மகளுடன் ஹெச்எம் பலி
சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் அருகே இன்று அதிகாலை ரோட்டில் கார் கவிழ்ந்ததில் தலைமையாசிரியை, அவரது மகள் பரிதாபமாக இறந்தனர். கணவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(47). இவர் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காந்திமதி (43), கலிங்கப்பட்டி அருகில் உள்ள மேலமரத்தோணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியை.
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று காலை பாஸ்கரன் தனது காரில் மனைவி காந்திமதி, மகள் பவித்ரா (15), மகன் கார்த்திகேயன் (14) மற்றும் உறவினர் பெண் சுமதி (18) ஆகியோருடன் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர். காரை பாஸ்கரன் ஓட்டினார். சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்றிரவு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் கார் திருவேங்கடம் அடுத்த சங்குபட்டி விலக்கில் வரும்போது பாஸ்கரன் கண் அயர்ந்ததாக தெரிகிறது. இதனால் கார் நிலை தடுமாறி ரோட்டோரம் இருந்த ஆலமரத்தில் மோத முயன்றது. இதைபார்த்த பாஸ்கரன் மனைவி காந்திமதி அலறினார். உடனே சுதாரித்த அவர் காரை வேகமாக திருப்பவே, கார் ரோட்டில் பல்டி அடித்து கவிழ்ந்தது.
கார் நொறுங்கியதில் காந்திமதி, மகள் பவித்ரா இருவரும் உடல் நசுங்கி இறந்தனர். பாஸ்கரன், மகன் கார்த்திகேயன், சுமதி 3 பேரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் பலியான பவித்ரா திருவேங்கடத்தில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 1/4/2025 12:24:38 PM
-Updated 1/4/2025 12:06:22 PM
-Updated 1/4/2025 12:04:37 PM
-Updated 1/4/2025 12:04:27 PM
-Updated 1/4/2025 12:04:19 PM
-Updated 1/4/2025 12:04:11 PM
-Updated 1/4/2025 12:03:58 PM
-Updated 1/4/2025 12:03:49 PM
-Updated 1/4/2025 12:03:41 PM
-Updated 1/3/2025 2:18:56 PM
-Updated 1/3/2025 2:18:45 PM
-Updated 1/3/2025 2:18:36 PM
-Updated 1/3/2025 2:18:28 PM
-Updated 1/3/2025 2:18:19 PM
-Updated 1/3/2025 2:18:09 PM