ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு சுடுகாட்டில் இளம்பெண் உடல் எரிப்பு
பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள எஸ்வி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாராவ். இவரது மகன் கோபி (28). சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுகிறார். திருப்பதி, கோல்கொண்டா பகுதியில் வசித்துவரும் சுதாகர் என்பவரின் மகள் பவானி (21). இவருக்கும் கோபிக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தரண் (2), மோச்சுதா என்ற கைக்குழந்தை உள்ளனர். திருத்தணி அருகே உள்ள கேஜி கண்டிகை கிராமத்துக்கு, கடந்த 3 மாதத்துக்கு முன்பு, கோபி, பவானி குடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் பவானி பெற்றோருக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்த கோபி, ‘‘நாங்கள் திருப்பதிக்கு வருகிறோம்’’ என்று கூறியுள்ளார். ஆனால், தாங்கள் அங்கு வருகிறோம் என பவானியின் பெற்றோர் அவரிடம் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர்கள் கேஜி கண்டிகைக்கும் வந்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததால், மருமகன் கோபியின் செல்போனுக்கு பேசி உள்ளனர். அவர் செல்போனை எடுக்கவில்லை. அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, எஸ்வி கண்டிகை கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு கோபி சென்றிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து பவானியின் பெற்றோர், எஸ்வி கண்டிகை கிராமத்துக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்களை வீட்டுக்குள் விட மறுத்து உறவினர்கள் தகராறு செய்துள்ளனர். இதுபற்றி பவானியின் தந்தை சுதாகர், ஆர்கே பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் பவானி இறந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கதறி அழுதனர். மகள் உடலை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. திடீரென ஊர் மக்கள் வந்து, பவானி உடலை, எஸ்வி கண்டிகை யாதவ காலனியில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே, ஆர்கே பேட்டை போலீஸ் எஸ்ஐக்கள் சுரேந்தர், அன்பரசு ஆகியோர் போலீசாருடன் சுடுகாட்டுக்கு விரைந்தனர். தகவல் கிடைத்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிகாமணியும் சம்பவ இடத்துக்கு விரைந்தார். அப்போது பவானியின் உடலை தீ வைத்து எரித்து கொண்டு இருந்தனர். தீயை அணைத்து பவானி உடலை போலீசார் கைப்பற்றினர். பின், பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆர்கே பேட்டை போலீசார், தலைமறைவாகிவிட்ட பவானியின் கணவர் கோபியை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/14/2013 12:25:43 PM
-Updated 12/14/2013 12:25:18 PM
-Updated 12/14/2013 12:18:33 PM
-Updated 12/14/2013 12:16:03 PM
-Updated 12/13/2013 2:03:16 PM
-Updated 12/13/2013 2:03:06 PM
-Updated 12/13/2013 2:02:34 PM
-Updated 12/13/2013 2:02:04 PM
-Updated 12/13/2013 1:57:24 PM
-Updated 12/13/2013 1:57:10 PM
-Updated 12/13/2013 1:54:53 PM
-Updated 12/13/2013 1:54:42 PM
-Updated 12/12/2024 3:44:16 PM
-Updated 12/12/2024 3:44:05 PM
-Updated 12/12/2024 3:43:48 PM