கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் நேதாஜி நகர் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (38). புதுபெருங்களத்தூர் புத்தர் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் கணேசன் (27). இருவரும் நண்பர்கள். டைல்ஸ் வேலை செய்தனர். இன்று காலை ஒரகடத்துக்கு பைக்கில் வேலைக்கு கிளம்பி சென்றனர். வண்டலூர் மேம்பாலத்தில் சென்றபோது பைக் மீது பின்னால் கல் ஏற்றி வந்த லாரி மோதியது.
இதில் பாலமுருகன், கணேசன் ஆகியோர் கால்கள் முறிந்தது. மேலும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த வண்டலூர் ஓட்டேரி எஸ்.ஐ.க்கள் சுதர்சன், பூவராகமூர்த்தி, மோகன கிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான லாரி டிரைவரை தேடுகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/14/2013 12:25:43 PM
-Updated 12/14/2013 12:25:29 PM
-Updated 12/14/2013 12:25:18 PM
-Updated 12/14/2013 12:16:03 PM
-Updated 12/13/2013 2:03:16 PM
-Updated 12/13/2013 2:03:06 PM
-Updated 12/13/2013 2:02:34 PM
-Updated 12/13/2013 2:02:04 PM
-Updated 12/13/2013 1:57:24 PM
-Updated 12/13/2013 1:57:10 PM
-Updated 12/13/2013 1:54:53 PM
-Updated 12/13/2013 1:54:42 PM
-Updated 12/12/2024 3:44:16 PM
-Updated 12/12/2024 3:44:05 PM
-Updated 12/12/2024 3:43:48 PM