திருவொற்றியூர்:சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள தெய்வ சிகாமணி நடுநிலை பள்ளியில் 450 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிக்கு வகுப்பறை பற்றாக்குறை இருந்தது. மழை காலத்தில் தண்ணீர் ஒழுகியது. பள்ளியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திருவொற்றியூர் தொகுதி எம்எல்ஏ நிதி ரூ.15 லட்சம், அசோக் லேலண்ட் நிறுவன சமுதாய வளர்ச்சி திட்டத்தில் ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. இந்த பணத்தில் இருந்து தெய்வ சிகாமணி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. பள்ளி கட்டிட திறப்பு நேற்று நடந்தது. தலைமை ஆசிரியை ஸ்ரீகலா தலைமை வகித்தார். எம்எல்ஏ குப்பன் பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில், அரிமா சங்க நிர்வாகிகள் வரதராஜன், துரைராஜ், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/14/2013 12:25:43 PM
-Updated 12/14/2013 12:25:29 PM
-Updated 12/14/2013 12:25:18 PM
-Updated 12/14/2013 12:18:33 PM
-Updated 12/14/2013 12:16:03 PM
-Updated 12/13/2013 2:03:16 PM
-Updated 12/13/2013 2:02:34 PM
-Updated 12/13/2013 2:02:04 PM
-Updated 12/13/2013 1:57:24 PM
-Updated 12/13/2013 1:57:10 PM
-Updated 12/13/2013 1:54:53 PM
-Updated 12/13/2013 1:54:42 PM
-Updated 12/12/2024 3:44:16 PM
-Updated 12/12/2024 3:44:05 PM
-Updated 12/12/2024 3:43:48 PM