அடித்து கொலையா? துபாயில் மரத்தில் தொங்கிய இந்திய வாலிபர் சடலம்
துபாய்: தொழிற்பேட்டையில் மரத்தில் தொங்கிய நிலையில் இந்திய வாலிபர் மர்மமாக இறந்து கிடந்தார். துபாயில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துபாயில் ஏராளமான இந்தியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்குள்ள வடக்கு நுழைவாயிலான அல் குவிஸ் நகரத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலை அருகே நேற்று மரத்தில் இந்திய வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மர்மமாக இறந்து கிடந்தார். அதிகாலை வாக்கிங் சென்ற சிலர் இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்தனர்.
போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் இறந்தவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. ஆனால் அவரது பெயர், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. தொழிற்சாலை பகுதியில் நண்பர்களுடன் அவர் தங்கி இருந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திய வாலிபரை யாராவது அடித்து கொலை செய்து மரத்தில் தொங்க விட்டார்களா அல்லது தற்கொலையா என விசாரிக்கின்றனர்
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/11/2025 2:13:55 PM
-Updated 12/11/2025 2:13:46 PM
-Updated 12/11/2025 2:13:36 PM
-Updated 12/11/2025 2:12:31 PM
-Updated 12/11/2025 2:12:22 PM
-Updated 12/11/2025 2:12:10 PM
-Updated 12/11/2025 2:11:59 PM
-Updated 12/10/2025 3:02:03 PM
-Updated 12/10/2025 3:01:53 PM
-Updated 12/10/2025 3:01:41 PM
-Updated 12/10/2025 3:00:20 PM
-Updated 12/10/2025 3:00:02 PM
-Updated 12/10/2025 2:59:45 PM
-Updated 12/10/2025 2:59:33 PM
-Updated 12/10/2025 2:59:23 PM