திருவள்ளூரில் 3 ஆண்டாக திறக்கப்படாமல் இருக்கும் பள்ளி கட்டிடம்
திருவள்ளூர்:திருவள்ளூர் வி.எம். நகரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 700 மாணவிகள் படிக்கின்றனர். போதிய வகுப்பறை இல்லை. மேலும் கட்டிடங்கள் பழுதடைந்ததால் கடந்த 2010ம் ஆண்டு நபார்டு திட்டத்தில் ரூ.82 லட்சம் மதிப்பில் 13 வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது. அதன்படி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
ஆனால் மின்விளக்கு, மின்விசிறி பொருத்தப்படவில்லை. 6 மாதத்தில் பணி முடித்து, ஒப்படைக்க வேண்டிய கட்டிடம் 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஒப்படைக்கவில்லை. இதனால் மாணவிகள் மரத்தடியில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட மாவட்ட அலுவலகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் கூறுகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/11/2025 2:13:55 PM
-Updated 12/11/2025 2:13:46 PM
-Updated 12/11/2025 2:13:36 PM
-Updated 12/11/2025 2:12:31 PM
-Updated 12/11/2025 2:12:22 PM
-Updated 12/11/2025 2:12:10 PM
-Updated 12/11/2025 2:11:59 PM
-Updated 12/10/2025 3:02:03 PM
-Updated 12/10/2025 3:01:53 PM
-Updated 12/10/2025 3:01:41 PM
-Updated 12/10/2025 3:00:20 PM
-Updated 12/10/2025 3:00:02 PM
-Updated 12/10/2025 2:59:45 PM
-Updated 12/10/2025 2:59:33 PM
-Updated 12/10/2025 2:59:23 PM