குண்டும் குழியுமாக கிடக்கும் புத்தாகரம்-சூரப்பட்டு சாலை மக்கள் கடும் அவதி
புழல்:சென்னை மாநகராட்சி 24வது வார்டுக்கு உட்பட்ட புத்தாகரம் - சூரப்பட்டு சாலை சுமார் 3 கிமீ தூரம் கொண்டது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்ல முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் சிலர், சாலை பள்ளங்களில் மண்ணை கொட்டி தற்காலிகமாக சரிப்படுத்தினர். ஆனால் தொடர்ந்து பெய்த மழையால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் நடந்து கூட செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பல நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மேம்பாலத்தின் கீழே சப்வேயில் மழைநீரும் கழிவுநீருமாக கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்யுமாறு அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 12/11/2025 2:13:55 PM
-Updated 12/11/2025 2:13:46 PM
-Updated 12/11/2025 2:13:36 PM
-Updated 12/11/2025 2:12:31 PM
-Updated 12/11/2025 2:12:22 PM
-Updated 12/11/2025 2:12:10 PM
-Updated 12/11/2025 2:11:59 PM
-Updated 12/10/2025 3:02:03 PM
-Updated 12/10/2025 3:01:53 PM
-Updated 12/10/2025 3:01:41 PM
-Updated 12/10/2025 3:00:20 PM
-Updated 12/10/2025 3:00:02 PM
-Updated 12/10/2025 2:59:45 PM
-Updated 12/10/2025 2:59:33 PM
-Updated 12/10/2025 2:59:23 PM