ஆட்டோ டிரைவர் மண்டை உடைப்பு சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது
ஆவடி:ஆட்டோ டிரைவரின் மண்டையை உடைத்த சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அம்பத்தூர் கச்சினாங்குப்பம் கன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தவமணி (42). ஆட்டோ டிரைவர். இவர் நேற்றிரவு அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்தார். அப்போது போதையில் வந்த 3 பேர், ஆட்டோ ஸ்டாண்டில் தகராறு செய்துள்ளனர். இதை தவமணி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் 3 பேரும் அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து தவமணி தலையில் தாக்கிவிட்டனர். ரத்தம் கொட்டியதால் தவமணி மயங்கி விழுந்தார். சக ஆட்டோ டிரைவர்கள் வந்து தவமணியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பியோட முயன்ற 3 பேரை பிடித்து அம்பத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் பிடிபட்டவர்கள் அம்பத்தூர் பாடிகுப்பம் காந்தி நகரை சேர்ந்த சிவா (19), சட்டக்கல்லூரி முதல் வருடம் மாணவர். மேற்கு முகப்பேர் கண்ணன் தெருவை சேர்ந்த ராகுல் (25), ரெட்டிபாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (23) என்று தெரிந்தது. இவர்களை கைது செய்தனர். இன்று காலை அம்பத்தூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2013 2:27:20 PM
-Updated 11/27/2013 2:27:12 PM
-Updated 11/27/2013 2:27:02 PM
-Updated 11/27/2013 2:26:49 PM
-Updated 11/27/2013 2:26:40 PM
-Updated 11/27/2013 2:26:30 PM
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM