கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல் நீர் திறப்பு
ஊத்துக்கோட்டை:கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக வினாடிக்கு 100 கன அடி வீதம் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக-ஆந்திர நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டுக்கு 15 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 200 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர், தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டுக்கு ஜூலை 6ம் தேதி வந்தது. அதன்பிறகு கண்டலேறுவில் இருந்து படிப்படியாக 600 கன அடியாக திறக்கப்பட்டது.
ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும். ஆனால் 80 நாளில் தமிழகத்துக்கு ஒரு டிஎம்சி தண்ணீரே கிடைத்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரி வறண்டு காணப்பட்டதால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, கண்டலேறுவில் இருந்து கடந்த 15ம்தேதி கூடுதலாக வினாடிக்கு 100 கன அடி என 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டுக்கு 130 கன அடி தண்ணீர் வந்தது. கடந்த 24ம்தேதி 120 கன அடியாகவும், நேற்று முன்தினம் 117 கன அடியாகவும் குறைந்து வந்தது.
தண்ணீர் வரத்து குறைய தொடங்கியதால் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மீண்டும் கூடுதலாக 100 கன அடி என 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/27/2013 2:27:30 PM
-Updated 11/27/2013 2:27:20 PM
-Updated 11/27/2013 2:27:02 PM
-Updated 11/27/2013 2:26:49 PM
-Updated 11/27/2013 2:26:40 PM
-Updated 11/27/2013 2:26:30 PM
-Updated 11/26/2013 2:42:17 PM
-Updated 11/26/2013 2:42:06 PM
-Updated 11/26/2013 2:41:57 PM
-Updated 11/26/2013 2:41:45 PM
-Updated 11/26/2013 2:41:22 PM
-Updated 11/26/2013 2:41:04 PM
-Updated 11/26/2013 2:40:55 PM
-Updated 11/26/2013 2:40:47 PM
-Updated 11/26/2013 2:40:37 PM