Tamil Month Rasi Palan Maasi 2013
2013
25
Nov
சித்தூர் - கடப்பா டிரங்க் சாலையை அகலப்படுத்த மக்கள் வலியுறுத்தல் கடைகளால் போக்குவரத்து நெரிசல்


திருத்தணி:சித்தூர்- கடப்பா டிரங்க் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருத்தணி நகராட்சியில் பகுதியில் சித்தூர் சாலை-கடப்பா டிரங்க் ரோடு செல்கிறது. இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை பராமரித்து வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், வேலூர், திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடியுடன் காணப்படும்.

இந்த நிலையில் சித்தூர், கடப்பா சாலையில் பழக்கடை, பானி பூரி மற்றும் சிக்கன் கடைகள் வைத்துள்ளனர். வாகனங்களில் செல்பவர்கள் வண்டிகளை நிறுத்தி சாப்பிடுவதால் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் கடைகளில் சேரும் கழிவுகளை ரோட்டில் கொட்டி விடுகின்றனர். இதனால் குப்பைகள் காற்றில் பறந்து செல்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள கேரி பேக்குகளை பயன்படுத்துகின்றனர்.

எனவே, சித்தூர், கடப்பா டிரங்க் ரோட்டை அகலப்படுத்த வேண்டும். ரோட்டில் உள்ள கடைகளை முறைப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெருக்கடி குறைக்க அமிர்தாபுரம்-பொதட்டூர்பேட்டையை இணைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran